விஜய் டப்பிங்கில் செய்யும் அந்த மாஸ்டர் வேலை..! - வேட்டைக்காரன் வில்லன் சொல்லும் சீக்ரட்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யுடன் நடித்தது பற்றி வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்த ரவிஷங்கர் மனம் திறந்துள்ளார். 

விஜய் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டைக்காரன். அனுஷ்கா, சலீம் கோஸ், டெல்லி கணேஷ், ஶ்ரீ ஹரி உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரவிஷங்கர். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கண்ணடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் ரவிஷங்கர் தனது சினிமா பயணம் குறித்து நம்மிடம் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து கூறிய அவர், ''விஜய் எப்போதும் செட்டில் சத்தமாக பேசி, நடித்து எமோஷன்ஸை காட்டமாட்டார். அவர் முகமும் உடலும் மட்டுமே நடிக்கும், குரல் கம்மியாகதான் இருக்கும். ஆனால், டப்பிங் செய்யும் போது குரலில் அந்த எமோஷன்ஸை கொண்டு வந்துவிடுவார். காரணம் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னதான் கஷ்டப்பட்டு பேசினாலும், அது வராது, அதனால் டப்பிங்கில் அதை செய்வதுதான் சரி. அதை விஜய் மிக சரியாக செய்வார். அதனால்தான் அவர் மாஸ்டர்'' என புகழ்ந்துள்ளார். 

மேலும் நடிகர் விஜய் குறித்து, வேட்டைக்காரன் படத்தில் நடித்தது மற்றும் தனது சினிமா அனுபவங்களை உற்சாகமாக பி.ரவிஷங்கர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

விஜய் டப்பிங்கில் செய்யும் அந்த மாஸ்டர் வேலை..! - வேட்டைக்காரன் வில்லன் சொல்லும் சீக்ரட்ஸ். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய் பற்றி வேட்டைக்காரன் வில்லன் கருத்து | Vijay's Vettaikaran villian P Ravishankar opens on vijay's skills

People looking for online information on P Ravishankar, Vettaikaran, Vettaikaran Villian, Vijay will find this news story useful.