விஜய் நடிக்கும் தளபதி 65.. படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர்.!! அப்போ கண்டிப்பா செம குத்துதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் குறித்து புதிய தகவல் தெரிய வந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

விஜய் - அனிருத் ஜோடி இதற்கு முன்பு கத்தி திரைப்படத்தில் இணைந்திருந்தது. மேலும் தற்போது மாஸ்டர் திரைப்படத்திலும் இவர்களின் கூட்டணி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. 

இந்நிலையில் தற்போது விஜய்யின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பது படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் படத்தில் அனிருத் | vijay's thalapathy 65 music director confirmed

People looking for online information on Anirudh Ravichander, Thalapathy 65, Vijay will find this news story useful.