''விஜய் கூட அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது...!" - ஷாஜகான் பட நினைவுகள் சொல்லும் ரிச்சா பல்லோட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாஜகான் படத்தில் நடித்த ரிச்சா பல்லோட் அப்படம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

Advertising
Advertising

விஜய் நடிப்பில் 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷாஜகான். இத்திரைப்படத்தில் ரிச்சா பல்லோட் கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் படமாக உருவான ஷாஜகான் திரைப்படம், இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. மணிசர்மா இசையமைத்த இத்திரைப்படத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் நடிகை ரிச்சா பல்லோட் நம்முடன் வீடியோ கால் மூலம் உரையாடினார். அப்போது அவர் ஷாஜகான் பட நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ''விஜய்யுடன் பாடல் காட்சிகள் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அவர் ரொம்ப ஈசியாக டைமிங்கை பிக்கப் செய்து செய்துவிடுவார். அவருடன் டான்ஸ் ஆடுவது செம ஜாலியாக இருந்தது. ஷாஜகான் படத்தின் பாடல்கள் ரொம்பவே அருமையாக இருக்கும். இப்போதும் ஷாஜகான் படத்திற்காக எனக்கு கிடைத்து வரும் அன்பு, மிகப்பெரியது. இப்போது பலர் அந்த பட பாடல்களை இமிடேட் செய்து வீடியோ வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது'' என அவர் தெரிவித்துள்ளார். 

''விஜய் கூட அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடும் போது...!" - ஷாஜகான் பட நினைவுகள் சொல்லும் ரிச்சா பல்லோட். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஷாஜகான் நினைவுகள் பகிரும் விஜய் பட நாயகி | vijay's shahjahan actress richa pallod shares her memories

People looking for online information on Richa Pallod, Shahjahan, Vijay will find this news story useful.