தளபதி விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு திரைப்பட ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் சச்சின். அந்த அளவுக்கு துறுதுறு இளைஞராக ரசிகர்களை கவர்ந்திருப்பார் விஜய். வடிவேலுவுடன் இவர் அடிக்கும் லூட்டி, காதல் என இந்த படம் ஒரு செம ட்ரீட்டாக அமைந்திருக்கும்.
படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியும் இந்த படம் இந்த படத்தின் மவுசு குறையவில்லை. இந்நிலையில் இந்த படம் குறித்தும் விஜய்யுடனான அனுபவம் குறித்தும் Behindwoods TVக்கு இயக்குநர் ஜான் மகேந்திரன் பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், விஜய்யை பார்க்க, நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் மருத்துவமனையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தனர். ஒரு பெண் கையில் ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜய்யுடன் தயங்கி கேட்டபோது உடனே வந்து அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது வந்ததற்கு அவர்களை கண்டித்தார். சொல்லியிருந்தால் உங்களை சென்னைக்கே வரவழைத்திருப்பேன் என்றார். அந்த அளவுக்கு தனது ரசிகர்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார் என்று தெரிவித்தார்.