விஜய்யின் நண்பன் படத்தின் காட்சியை போல நிஜத்தில் நடந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில் 2012-ஆம் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து, வீடியோ கால் மூலம் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, குழந்தையை காப்பாற்றுவார்கள். பரபரப்பாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த சீன், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம் ஹனகல் பகுதியை சேர்ந்த வாசவி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தெரிவிக்கப்பட, கொரொனா ட்யூட்டியில் இருப்பதால், சற்று தாமதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவரின் அக்கம் பக்கத்து வீட்டினர், அதே பகுதியை சேர்ந்த ப்ரியங்கா எனும் மகப்பேறு மருத்துவருக்கு விஷயத்தை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து நண்பன் பட காட்சியை போல வீடியோ கால் வசதியில் ப்ரியங்கா வழிமுறைகளை எடுத்துரைக்க, பெண்கள் அனைவரும் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். திரைப்பட காட்சியை போல நிஜத்தில் நடந்த இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.