விஜய்யின் மாஸ்டர்.. எதிர்ப்பார்ப்பை எகிற வைக்க படக்குழுவின் மாஸ் ப்ளான்.!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் ட்ரெய்லர் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பிரச்சனையால் தள்ளி போனது. தற்போது படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது. 

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படத்திற்கென தனியாக ட்ரெய்லர் ஒன்றை ரிலீஸ் செய்ய வேண்டாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் டீசரில் விஜய்யின் டயலாக் எதுவும் இல்லாமல் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த படக்குழு, அடுத்ததாக தொலைக்காட்சி புரொமோக்கள் மூலம் ரசிகர்களை கவர முடிவு செய்திருப்பதாக விவரம் அறிந்த கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் பட தகவல் | vijay's master trailer plan exclusive update

People looking for online information on Master, Master trailer, Vijay will find this news story useful.