BREAKING : விஜய்யின் மாஸ்டர்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. டீசர் தீபாவளிக்கு.. படம் பொங்கலுக்கு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, நேரடியாக தியேட்டர்களில் மாஸ்டர் 10-ஆம் தேதி அன்று வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமின்றி., ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசர் வெளியீடு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் தீபாவளிக்கு (நவம்பர் 14) மாலை 6 மணி அளவில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் படத்திலிருந்து புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு டீசர் எனவும், பொங்கலுக்கு படத்தின் ரிலீஸ் எனவும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டை ப்ளான் செய்திருக்கிறது மாஸ்டர் படக்குழு.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தகவல் | Vijay's master teaser and movie release plans is here

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Vijay will find this news story useful.