விஜய்யின் மாஸ்டர்.. 'என்ன நண்பா., ரெடியா..?!' - படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து படக்குழு ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மாஸ்டர் திரைப்படம் நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தற்போது மாஸ்டர் படக்குழு ஒரு புதிய வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். மாஸ்டர் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடுவது போல உருவாகியுள்ள இந்த வீடியோவுடன், ரிலீஸ் பற்றிய அப்டேட் நாளை 12.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் படக்குழு புதிய வீடியோ | Vijay's master team releases new video with massive update

People looking for online information on Master, Master Release, Vijay will find this news story useful.