விஜய் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ... ஆனா ரீச் எப்படி தெரியுமா.?! வெளியான விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் மாஸ்டர் பட செல்ஃபி போட்டோ, ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது விஜய்யின் புகைப்படம் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் ட்விட்டரில், அதிகம் ரி-டிவீட் செய்யப்பட்ட ட்வீட் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ட்விட்டரில் வெளியான இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருப்பதுடன், ரசிகர்கள் இதை ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் போட்டோ செய்த சாதனை | Vijay's master selfie is the most re tweeted photo

People looking for online information on Master, Master Selfie, Vijay will find this news story useful.