விஜய்யின் மாஸ்டர்.. OFFIAL-ஆக வந்த ரிலீஸ் தகவல்.!!! படத்தின் மொத்த RUN TIME இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து  படக்குழு முக்கிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாகவும், ஆண்ட்ரியா, மாளவிகா மோகன, அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி போன மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தற்போது பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த சூழலில், ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்துடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 56 நிமிடங்கள் எனவும் நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி | Vijay's master release daate confirmed and movie runtime

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Master Release, Vijay will find this news story useful.