விஜய்யின் மாஸ்டர்.. பக்கவாக வந்திருக்கும் படம். - படக்குழு செம ஹாப்பி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது. 

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே சூப்பட் ஹிட் அடித்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் சூழலால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் நமக்கு கிடைத்துள்ளது. நேற்று இரவு மாஸ்டர் திரைப்படத்தின் முழு கட்டையும் படக்குழுவினர் பாத்துள்ளனர். இதை பார்த்து பிறகு படக்குழு முழு திருப்தி அடைந்துள்ளது. 

மேலும் இன்று (14/12/2020) படத்தை சென்சாருக்கு அனுப்பியிருப்பதாகவும் நாளை மறுநாள் (16/12/2020) சென்சார் நடைபெறும் எனவும் நமது கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் பட புதிய தகவல் | vijay's master movie new update sent to censor

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Master Censor, Vijay will find this news story useful.