விஜய்யுடன் முதல் சந்திப்பிற்கு பிறகு நடந்த விஷயங்கள்.! - மாஸ்டர் மாளவிகா மோகனன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மாளவிகா மோகனன் நடிகர் விஜய்யுடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்துள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பே, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். 

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் மாளவிகா மோகனன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விஜய்யுடன் முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''முதல்முறை விஜய் சாரை மாஸ்டர் திரைப்படத்தின் பூஜையின் போது சந்தித்தேன். அப்போது அவரிடம் சரியாக பேசும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த 6 மாதங்களில், அவர் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டார்''. மேலும் விஜய் மற்றவர்களிடம் காட்டும் அக்கறை மற்றும் அன்பை பற்றி பெருமையாக பதிவிட்டுள்ள மாளவிகா, விஜய் ரொம்பவே தயிர் சாதத்தை விரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய்யுடன் முதல் சந்திப்பு பற்றி மாளவிகா மோகனன் | vijay's master actress malavika mohanan opens her first meet with vijay

People looking for online information on Malavika Mohanan, Master, Vijay will find this news story useful.