நடிகர் விஜய்யின் மேனஜர் நீக்கப்பட்டது குறித்து பரவி வந்த செய்தி குறித்து முக்கிய தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் இணையவுள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் மேனஜரும், மாஸ்டர் படத்தின் லைன் ப்ரொட்யூசருமான ஜகதீஷுக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரை விஜய் வேலையில் இருந்து அனுப்பிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது, இது முற்றிலும் ஒரு பொய் செய்தி என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் விஜய்யின் மேனஜர் நீக்கம் குறித்து பரவி வந்த தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.