BREAKING: ஒத்திவைக்கப்பட்ட விஜய், சூர்யா படங்களின் படப்பிடிப்பு! காரணம் என்ன? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதே போல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

Advertising
>
Advertising

பீஸ்ட் படத்திற்கு இதுவரை 4-கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதே போல் எதற்கும் துணிந்தவன் படத்தின் இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்பும் (26.09.2021) அன்றே தென்காசியில் முடிவடைந்தது. மேற்கொண்டு இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாகவும், அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் படமாக்க இயக்குனர் பாண்டிராஜ் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

பின்னர் ஒரு பாடல் காட்சியும், பேட்ச் ஒர்க்கும் சென்னையில் நடைபெறுவதாக இருந்தது.  இந்நிலையில் சென்னை பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை வெள்ளம் காரணமாக பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களின் படப்பிடிப்பு ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல் கார்த்தி நடிக்கும் விருமன் மற்றும் ஏனைய சில படங்களின் படப்பிடிப்பும் பலத்த மழை வெள்ளம் காரணமாக ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் படங்களின் முதல் லுக் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay’s Beast , Surya’s ET,shootings postponed to one week later

People looking for online information on Beast, Etharkkum Thuninthavan, Karthi, Suriya, Vijay, Viruman will find this news story useful.