விஜய் தேவர்கோண்டாவா இது??....கழுத்து வரைக்கும் முடி வளர்ந்து... லேட்டஸ்ட் போட்டோ வைரல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தமிழில் மகாநதி, நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அர்ஜுன் ரெட்டி படத்திற்கு தமிழ் இளைஞர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். அதேபோல் தமிழ் ரசிகைகளின் மனதிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இவர் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை தந்தையர் தினத்தன்று ரிலீஸ் செய்துள்ளார்.

அதில் முடியெல்லாம் கழுத்து வரை வளர்த்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இது வெறும் லாக்டவுன் எபெக்ட்டா அல்லது புதிய படத்திற்கான ஹேர்ஸ்டைலா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

விஜய் தேவர்கோண்டா லேட்டஸ்ட் ஷாக்கிங் போட்டோ Vijaydevarkonda latest shocking hairstyle and getup

People looking for online information on Lockdown, Vijay Deverakonda will find this news story useful.