திடீரென மருத்துவமனையில் விஜயகாந்த்!!.. கேப்டனுக்கு என்ன ஆச்சு? வெளியான பரபரப்பு அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட நடிகர்களும் பிரபலங்களும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களும் அடுத்தடுத்து  உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தகவலை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நடிகர் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

முதல்கட்ட தகவலின்படி விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தேமுதிக அதிகார பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்  தற்போது கேப்டன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijayakanth admitted in hospital what happened? health status

People looking for online information on Vijayakanth will find this news story useful.