விஸ்வாசம் தேசிய விருது.. விஜய் படத்தில் தொடங்கிய பயணம்.. இமான் நெகிழ்ச்சி.. காரணம் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஸ்வாசம் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமானுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

67 வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருது  பட்டியலில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாக அசுரன் திரைப்படத்துக்கும், சிறப்பு மென்ஷன் படமாக ஒத்த செருப்பு படத்துக்கும் விருதுகள் வழங்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளன. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்படுகிறது. அசுரன் படத்துக்காக சிறந்த நடிகர் விருது தனுஷ்க்கு வழங்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகளின் ஒரு அங்கமாக விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேசியவிருது பெற்றவர்களுக்கு தமிழ் திரையுலகினர் தொடர்ச்சியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதில் விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்கான தேசியவிருது வென்ற டி.இமானுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான் தகுதியான விருது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த டி.இமான் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த வார்த்தையை உங்களிடமிருந்து பெற்றது எனக்கு கிடைத்த பெரும் ஆசிர்வாதம். இளையராஜா அவர்களும் நீங்களும் என் வாழ்க்கையில் பெரிய உந்து சக்திகள். அதற்கு இறைவனுக்கு நன்றிகள் என்று பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்ததாக குறிப்பிட்டு இமான் ஒரு முக்கிய தகவலை ஒரு சிறிய கடிதம் மூலம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

அதில்,  “தேசியவிருது பெற்றதற்காக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சார் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் எனது இசைப் பயணம் விஜய் அண்ணனுடன் தமிழன் திரைப்படத்திற்கு முதன் முதலாக இசை அமைப்பதில் தொடங்கியது, இப்போது விஸ்வாசம் படத்திற்கு எனக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்திற்கு விஜய் அண்ணா வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது தனிச் சிறப்பான ஒன்று. விஜய் அண்ணனும் அஜித் சாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரித்திருப்பது எனக்கு நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது” என்று இமான் குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: விஜய் சேதுபதியுடன் விஜய் டிவி புகழை.. இப்படி பாத்துருக்கவே மாட்டீங்க.. வைரல் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay wishesh to D Imman National Award AJith Viswasam

People looking for online information on Ajith Kumar, D Imman, D. Imman, Rajinikanth, Vijay, Viswasam Tamil will find this news story useful.