VIDEO : மாஸ்டர் படம் பார்க்க அந்த பிரபல தியேட்டருக்கு வந்த தளபதி விஜய்.... தீயாய் பரவும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் இருந்தே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேல் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. மக்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து விலகி, மோசமான நிலையை அடைந்தனர். அதில் சினிமா துறையும் விதிவிலக்கல்ல. சினிமா கலைஞர்களும், தினக்கூலிகளும், திரையரங்கு உரிமையாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் திரையரங்குகளுக்கு உயிர் தந்தது போல் வெளியானது மாஸ்டர் திரைப்படம். மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க படக்குழுவினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இதற்கு முன்னுதாரணமாக செயல்பட்டு உள்ளார் நடிகர் விஜய். பொதுவாகவே அவரது படங்களை திரையரங்குகளில் சென்று பார்ப்பது அவரது வழக்கம். அந்த வகையில் வெளியாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை அவர் சென்னை தேவி தியேட்டரில் சென்று பார்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

VIDEO : மாஸ்டர் படம் பார்க்க அந்த பிரபல தியேட்டருக்கு வந்த தளபதி விஜய்.... தீயாய் பரவும் வீடியோ..! வீடியோ

Tags : Vijay, Master

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay watching master in devi theatre பிரபல தியேட்டருக்கு வந்த தளபதி விஜய்

People looking for online information on Master, Vijay will find this news story useful.