விஜய் - விஜய் சேதுபதி 'மாஸ்டர்' - குரூப் செல்ஃபி ஃபோட்டோ... அப்போ மாஸ்டர்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய், தான் பங்கு பெறும் காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் நிறைவு செய்தார். இதனையடுத்து விஜய் சேதுபதி, விஜய்க்கும் முத்தம் தரும் புகைப்படம் வெளியாகி டிரெண்டானது.

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு இன்றுடன்(மார்ச் 2) முடிவடைந்தது என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் பிரேம் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷாந்தனு, கௌரி கிஷன், ஸ்டண்ட் சில்வா, ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ட்விட்டரில் பகிர, அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'மாஸ்டர்' படம் ஏப்ரல் மாத வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. அண்மையில் தளபதி விஜய் இந்த படத்துக்கான டப்பிங் பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்தது. இந்த படத்தின் அடுத்த பாடலில் பணிபுரிந்து வருவதாக இசைக்கலைஞர் கெபா ஜெர்மியா தனது ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, பிரேம், கௌரி கிஷன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு | Vijay Vijay Sethupathi's Master shoot wrapped

People looking for online information on Anirudh Ravichander, Lokesh Kanagaraj, Master, Vijay, Vijay Sethupathi will find this news story useful.