வீடியோ காலில் விஜய் சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் தம்பதி.. "#THALAPATHY66"-ல் தளபதி லுக் இதானோ..?.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | Behindwoods விருது நிகழ்வில் சன்னி லியோன்.. "வாங்க ஜாலியோ ஜிம்கானா ஆக்கலாம்".. எப்போ? எங்க?

நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் விஜய் நடித்து வருகிறார். இதற்கு தற்போது "தளபதி 66" என குறிப்பிடப்பட்டு வருகிறது.

தளபதி 66..

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் "தளபதி 66"-இல் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர், இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். பிரபல ஹிட் இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

வீடியோ காலில் வாழ்த்திய விஜய்

தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடந்திருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்று வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றது. இந்நிலையில், தம்பதியர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம், நடிகர் விஜய் வாழ்த்து சொன்ன விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இதான் விஜய் லுக்கா?..

தளபதி 66 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி, சென்னையிலுள்ள தம்பதிகளுக்கு வீடியோ கால் மூலம் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் விஜய். இது தொடர்பான பதிவினை, அந்த வாலிபரின் தாய் பகிர்ந்து, "என்னோட மகனுக்கும், என்னுடைய மருமகளுக்கும் தளபதி 66 ஷூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் அழைத்து வாழ்த்தினார்" என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள், தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, தளபதி 66 லுக்கில் இருக்கும் விஐய்யின் கெட் அப், இப்படி தான் இருக்குமோ எனவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தளபதி 66 திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

வீடியோ காலில் விஜய் சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் தம்பதி.. "#THALAPATHY66"-ல் தளபதி லுக் இதானோ..?.." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay video call to couple and wish from thalapathy66 spot

People looking for online information on தளபதி 66, விஜய், Thalapathy66, Vijay, Vijay video call to couple will find this news story useful.