வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்
இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ்.தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் 5-ஆம் தேதி மாலை வெளியான வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பலரது விருப்ப பாடலாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் யூடியூபில் அதிக வியூவ்ஸ் குவித்த பாடல்களின் நீண்டபெரும் பட்டியலில் முதலிடத்தினை பிடித்துள்ளது. சுமார் 12.2 மில்லியன் வியூவ்ஸை தாண்டியுள்ள இந்த பாடல் 1.17 மில்லியனுக்கும் மேலான லைக்ஸ்களை குவித்துள்ளது.
பாடலில்,‘கட்டுமல்லி கட்டிவெச்சா.. வட்டக்கருப்பு பொட்டுவெச்சா’ என்கிற வரிகளை பல்லவியிலும், ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே’ ஆகிய வரிகள் அனுபல்லவியிலும் அமைந்திருந்தது. தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். அவருடன் இணைந்து இந்த பாடலை எம்.எம்.மானஸி பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார்.
இந்நிலையில் இப்பாடலை பாடிய பிரபல பாடகி மானஸி பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில், “எங்கள் வீட்டில் அனைவருக்கும் அரபிக் குத்து பாடல் பிடிக்கும் , ஆனாலும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் இப்போது அனைவருக்குமே விருப்ப பாடலாக , ஸ்பெஷலான பாடலாக மாறியுள்ளது. தமன் சார் என் மீது மிகவும் நம்பிக்கை வைத்து, அதெல்லாம் மானஸி பாடிருவா.. என்று கூறினார். அவர் என் வளர்ச்சியிலும் கரியரிலும் மிகவும் முக்கியமானவர்.
ஆனால் ஸ்டூடியோவை தாண்டி ஒரு செட்டில் போய் இதற்கான மேக்கிங் பண்ணும் பணிகளில் இணைந்தது புதிய அனுபவமாக இருந்தது. அத்துடன் தளபதி விஜய் சாருடன் டூயட் பாடும் ஆசை நிறைவேறியது. அவர் ரஞ்சிதமே ரஞ்சிதமே என கொஞ்சியது பின்னே என்னைத்தானே?.. (சிரிக்கிறார்). அவருடன் பாடல் மட்டுமில்ல, வசனம் பேசும் வாய்ப்பும் இருந்தது. ஒரு பாடகராகவும், ஒரு குரல் கலைஞராகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் ஸ்பெஷல், எங்கு பார்த்தாலும் இந்த Vibe தான், ஏகோபித்த ரெஸ்பான்ஸை கேட்க முடிந்தது” என ஜாலியாக பேசியுள்ளார். மானஸி பேசும் முழு பேட்டியை இணைப்பில் காணலாம்.
தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் எஸ்.தமன், தற்போது வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பது விஜய் மற்றும் தமன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.