விஜய் - ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு'.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போ? மெர்சலான அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "படத்துக்கு Music பண்ணி முடிச்சதும் அஜித் சார் Reaction இது தான்".. சூப்பர் விஷயம் பகிர்ந்த யுவன்!!

'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

‍இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக நடிகர் விஜய் நேற்று விமானம் மூலம் ஐதராபாத் சென்றது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது.

Also Read | "இது அன்பால் இணைந்த இதயம்.." A.R. ரஹ்மான் - இளையராஜா சந்திப்பு! ARR வெளியிட்ட சூப்பர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu next schedule starts from today at Hyderabad

People looking for online information on Hyderabad, Vamshi Paidipally, Varisu, Varisu Movie updates, Vijay, Vijay Varisu next schedule starts will find this news story useful.