விஜய் நடிக்கும் 'வாரிசு'.. UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்! போடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | தனுஷ் நடிக்கும் 'வாத்தி'.. அதிரடி போஸ்டருடன் வெளியான புதிய ரிலீஸ் தேதி!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் UK தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பீஸ்ட் படத்தை வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | பிரம்மாண்ட பாலிவுட் படத்தில் இணைந்த 'துணிவு' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்! செம்ம அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie UK Rights Bagged by Ahimsa Entertainment

People looking for online information on Ahimsa Entertainment, Varisu, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.