விஜய் நடித்த 'வாரிசு'.. சேட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல TV நிறுவனம்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் நேற்று (11.01.2023) வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இத்தனை கேக்கா.. கலக்கலான பிறந்தநாள் பார்ட்டியில் டான்ஸ்.. அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ் 😍..

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசையமைப்பாளர்  எஸ் தமன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான தமிழ் பதிப்பு வாரிசு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதல் வாரிசு திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி டிவி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை வாரிசு படத்தின் டைட்டில் கார்டில், சேட்டிலைட் பார்ட்னர் சன் டிவி என படக்குழு அறிவித்துள்ளது.

Also Read | கர்ப்பமாக இருந்ததன் நினைவாக வயிற்றுக்கு சிலை.. நடிகை நமீதா பகிர்ந்த வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Satellite TV Rights Bagged by Sun TV Deets

People looking for online information on Sun TV, Varisu, Varisu Movie Satellite TV Rights, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.