VARISU : ரஞ்சிதமே.. விஜய் பாடும் 'வாரிசு' முதல் சிங்கிள்.. வெளியான GLIMPSE வீடியோ.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு'படத்தின் முதல் சிங்கிள் பாடல் ப்ரோமோ வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | உலகின் உயரமான கட்டிடத்தில் பிறந்தநாள் வாழ்த்து.. 4 வருடமாக மாஸ் காட்டும் ஷாருக்கான்!

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். 'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில வாரங்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே" ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் முழு பாடலும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

 

Also Read | 'வாரிசு' படத்தில் குஷ்பு ரோல் இது தான்..! அவரே சொன்ன EXCLUSIVE தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie First Single Song Ranjithame Glimpse

People looking for online information on Varisu, Varisu Movie First Single Song Ranjithame, Varisu Ranjithame Song, Vijay, Vijay Varisu Movie First Single Song will find this news story useful.