'வாரிசு' படத்தின் BTS போட்டோ..விஜய் கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் BTS புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Vijay Varisu Movie BTS Image with Vamshi Thaman
Advertising
>
Advertising

தளபதி விஜய்யின் 66வது படமான வம்சி பைடிபள்ளி மற்றும் தில் ராஜுவின் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & இரண்டாவது, மூன்றாவது லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. 

Vijay Varisu Movie BTS Image with Vamshi Thaman

தமிழில் வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தெலுங்கில் வாராசுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. தற்போது, ​​அனைத்து நடிகர்களும் பங்கேற்கும் ஒரு நீண்ட மற்றும் முக்கியமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இன்று தனது 48வது பிறந்தநாளிலும் விஜய் இப்படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

வாரிசு படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோ சாலமன் இணைந்து கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றன. இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளில் இசையமைப்பாளர் தமன், வாரிசு படத்தின் படப்பிடிப்பில் விஜய்யை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறி, விஜய் மற்றும் இயக்குனர் வம்சியுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie BTS Image with Vamshi Thaman

People looking for online information on Thaman, Vamshi, Varisu, Vijay will find this news story useful.