"ஆட்டநாயகன்"..விஜய் நடித்த 'வாரிசு'.. 11 நாளில் உலகளவில் செய்த மொத்த வசூல் நிலவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் 11 நாள்  வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BIGG BOSS வின்னர் அசீம்க்கு இந்தியாவில் அறிமுகமாகும் விலையுயர்ந்த கார் பரிசு!!.. இந்த மாடலா?

நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்   வெளியானது.

வாரிசு படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி படத்தை வெளியிட்டுள்ளது.

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்தது. அடுத்து வாரிசு படம், 7 நாளில் 210 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது என தயாரிப்பு நிறுவனமான SVC அதிகாரப்பூர்வமாக  அறிவிததது.

இந்நிலையில் வாரிசு படம் 11 நாளில் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை மட்டும் இத்தனை கோடி பேர் பாத்துருக்காங்களா .. முழு விவரம்!

Vijay Varisu Movie Box Office Collection Official Report

People looking for online information on Varisu Movie Box Office Collection will find this news story useful.