வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? செம்ம அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து EXCLUSIVE தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | சூடுபிடிக்கும் வாரிசு படத்தின் UK டிக்கெட் முன்பதிவு.. வினியோகஸ்தர் தீபா ஐயர் EXCLUSIVE!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி "டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெறும்" என்று கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

Also Read | இந்தியன் 2 படப்பிடிப்பில் கருணாநிதியை நினைவுகூர்ந்து ட்வீட் செய்த கமல்.. வைரல் ஃபோட்டோ!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? செம்ம அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie Audio Launch Date Ganesh Venkatraman Exclusive

People looking for online information on Ganesh Venkatraman, Varisu, Varisu Movie Audio Launch, Vijay will find this news story useful.