VARISU : கேரளாவுல விஜய் -யின் ‘வாரிசு’.. இத்தனை ஸ்கிரீன்ல ரிலீஸா? அடிபொலி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "Title அடிக்குற எண்ணம் இல்லையா..? " .. மைனாவிடம் கேள்விகளை அடுக்கிய விஜே பார்வதி.! bigg boss 6

வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில்  வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.  

இந்நிலையில் கேரளாவில் 400 ஸ்கிரீன்களிலும் ரசிகர்கள் காட்சி ஹவுஸ்ஃபுல்லாக ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆம் கேரளாவில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி கேரளாவில் 400 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கேரள பாஷையில் சொல்ல வேண்டுமானால் கேரளாவில் விஜய் மஹோத்சவம் தான் என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

 

Also Read | Alya Manasa : விபத்தில் சிக்கி எலும்பு முறிவு.. “சஞ்சீவ் கதறி அழுறார்..”.. நடிகை ஆல்யா மானசா உருக்கம் ..

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Grand release 400 Screens in Kerala

People looking for online information on Thalapathy, Varisu, Vijay will find this news story useful.