RANJITHAME : ராஷ்மிகா ஸ்டைல்ல "சுத்தி தான் போடணும்".. வாரிசு ‘ரஞ்சிதமே’ 1 மில்லியன் லைக்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்

Vijay Varisu first single Ranjithame 1 M likes in same day
Advertising
>
Advertising

இப்படத்திற்கு, ஹரி, ஆஷிஷோர் சாலமன் மற்றும் விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ்.தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Varisu first single Ranjithame 1 M likes in same day

இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோருடன் பிரகாஷ்ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடலான் "ரஞ்சிதமே" பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய் இந்த பாடலை பாடி உள்ள இந்த பாடல் நவம்பர் 5 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்கு மத்தியில் ஐந்தே நிமிடத்தில் யூடியூப் தளத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ 1 லட்சம் லைக்குகளை குவித்து சாதனை படைத்தது .  அதன்பின்னர் இப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.தமன் நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, ‘இன்றுதான் எனக்கு தீபாவளி.. பட்டாசு பாடலுடன் உங்களுடன் கொண்டாட காத்திருக்கிறேன்’ என கூறியிருந்தார்.

எதிர்பார்த்தபடி நவம்பர் 5-ஆம் தேதி மாலை வெளியான இந்த பாடலில்,‘கட்டுமல்லி கட்டிவெச்சா.. வட்டக்கருப்பு பொட்டுவெச்சா’ என்கிற வரிகளை பல்லவியிலும், ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே’ ஆகிய வரிகள் அனுபல்லவியிலும் அமைந்திருந்தது.  தளபதி  விஜய் இந்த பாடலை பாடியுள்ளார். அவருடன் இணைந்து இந்த பாடலை எம்.எம்.மானஸி பாடியுள்ளார். பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் விஜய் படத்தில், விஜய் பாடி இடம்பெற்ற இந்த பாடல், வெளியான அன்றே 1 மில்லியன் லைக்ஸ்களை குவித்துள்ளதை அடுத்து வாரிசு பட பாடல் இன்னுமொரு சாதனையை எட்டியுள்ளது.

தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வரும் எஸ்.தமன், தற்போது வாரிசு திரைப்படத்துக்கு இசையமைத்திருப்பது விஜய் மற்றும் தமன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu first single Ranjithame 1 M likes in same day

People looking for online information on Rashmika Mandanna, S Thaman, Varisu, Vijay will find this news story useful.