வாரிசு படத்தின் ஐரோப்பிய உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Also Read | நயனுக்கு சொல்லிக் கொடுத்த விக்கி..😍 வைரலாகும் 'நானும் ரவுடி தான்' BTS வீடியோ
தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் 'வாரிசு' படம் உருவாகி வருகிறது.
'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில், கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தீபாவளி விடுமுறை கழித்து வாரிசு படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அக்டோபர் மாதத்துடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வாரிசு படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாரிசு & வராசுடு படத்தின் ஐரோப்பிய தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் உமா மகேஸ்வர ராவ் கண்டா கைப்பற்றி உள்ளார். இந்த படத்தை தனது 4சீசன்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ஐரோப்பா முழுவதும் வினியோகம் செய்ய உள்ளார்.
Also Read | சிவகார்த்திகேயன் நடித்த 'PRINCE'.. படத்தின் OTT- உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! முழு விவரம்