Also Read | Varisu : ‘எல்லா இடமும் நம்ம இடம்தான்!’ - ரிலீஸ்க்கு முன் ‘வாரிசு’ படம் பார்க்கும் விஜய்..?!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.
வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
சமீபத்தில் வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கில் வாரசுடு என பெயரிடப்பட்டுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு மொழி பதிப்பு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்துக்கு முன்னதாக தெலுங்கில் மாஸ் ஹீரோக்களின் படங்களான வீரசிம்ஹா ரெட்டி மற்றும் வால்டர் வீரய்யா ஆகிய பிரம்மாண்ட படங்கள் வெளியாகின்றன. இந்த படங்களையும் தெலுங்கு ரசிகர்கள் காண வேண்டும் என்கிற நோக்கில், வாரிசு படத்தின் தெலுங்கு ரிலீஸ், படக்குழுவினரால் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Also Read | Thunivu : ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செஞ்ச விஷயம்.. நெகிழ்ந்து போன துணிவு வில்லன் Excusive