விஜய் நடிக்கும் 'வாரிசு'.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் பண்ணது இவர் தானா? செம்ம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் முதல் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தளபதி என்ட்ரி செதறு செதறு.. வெளியாகிய THALAPATHY-66 படத்தின் மெர்சலான தலைப்பு! மாஸான FIRST LOOK!

இந்த படத்தின் போஸ்டரை பிரபல டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பீஸ்ட், பிகில், மாஸ்டர், சர்கார், மெர்சல் படங்களின் போஸ்டரை வடிவமைத்தவர்.

இந்த படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது. கோட் சூட் உடையில் விஜய் அமர்ந்து இருப்பது போலவும் பின்னணியில் அலுவலக அமைப்பில் கண்ணாடி சுவரும், பெரிய கட்டிடங்களும் அமைந்துள்ளது.  The Boss Returns என்று துணை தலைப்பும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Also Read | என்ன ஆச்சு பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாக்கு? கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன 80 MILLION FOLLOWERS

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Vamshi Varisu Movie First Look Poster designer Gopi Prasanna

People looking for online information on Thalapathy 66 Movie, Thalapathy 66 Varisu Movie, The boss Returns, Vijay, Vijay Vamshi Varisu Movie First Look Poster, Vijay Varisu Movie will find this news story useful.