ஏறக்குறைய 90களின் பிற்பகுதியில் தமிழில் சாட்டிலைட் டிவி சேனல்கள் வளர்ச்சி அடைந்தன. தற்போதைய காலங்களில் பல டிஜிட்டல் நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. சேனல்களைப் பொறுத்தவரை சாட்டிலைட் சேனல்களும் இயங்கி வருகின்றன. சாட்டிலைட் சேனல்களும் டிஜிட்டலில் தங்களுடைய தளத்தை வலுவாக நிறுவி இருக்கின்றன. எது எப்படி இருந்தாலும் வெகுஜன மக்கள் வீடுகளில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி விடவில்லை. என்னதான் ஸ்மார்ட் போன் யுகம் வந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தனித்துவமாக விளங்கி வருகின்றன.

Also Read | Rambha : குழந்தையாகவே மாறிய நடிகை ரம்பா.. செம Vibe-ல இருக்காங்க.. க்யூட் வீடியோ 😍
தொலைக்காட்சிக்கான பிரத்தியேக நிகழ்ச்சிகள் அதற்கான வடிவமைப்புகள் என எல்லாமே இன்னும் அதற்குரிய பிரம்மாண்டத்துடன் இருப்பதை காண முடிகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சேனலாக தமிழகத்தில் பிரபலமான சேனல் விஜய் டிவி. தொடக்க காலத்தில் விஜய் டிவி என்கிற பெயரிலும் பிற்காலத்தில் ஸ்டார் விஜய் என்கிற பெயரிலும் வளர்ச்சி அடைந்த விஜய் டிவி, பின்னர் திரைப்படங்கள் மற்றும் த்ரோபேக் நிகழ்ச்சிகளுக்காக விஜய் சூப்பர், பாடல்களுக்காக விஜய் மியூசிக் ஆகிய உப சேனல்களை தொடங்கியது. இந்த சேனல்களுக்கும் பெரும் வரவேற்பு உண்டானது.
சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் முதல் பெரியவர் வரை பலரையும் கவரக்கூடிய இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான சீசன் கடைசியாக நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தற்போது பெரியவர்களுக்கான அடுத்த சீசன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி வரும் நவம்பர் 19ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான ப்ரோமோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகின. அதாவது ‘நாளை நமதே’ என்கிற பாடலுடன் இந்த ப்ரோமோ வெளியாகி இருந்தது.
இந்த சீசனில் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன், பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | Venkat Prabhu : மறைந்த தமது அன்னையின் பிறந்த தினம்.. இயக்குநர் வெங்கட் பிரபு உருக்கம்..!