மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் உடன் விஜய் டிவி ராமர் சந்தித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Also Read | புதிய கொலமாஸ் ஸ்டில்களுடன் வெளியான விக்ரம் Title Track லிரிக் வீடியோ! எப்படி இருக்கு?
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் காமெடி நடிகர் ராமர். ராமரின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற காமெடி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம். இதனாலயே என்னம்மா ராம ர் என்றும் அழைக்கப்பட்டார்.
ராமர் வீடு, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்கு ரசிகர்கள் மத்தியில் பெயரைப் பெற்றுத்தந்தன. பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ‘கோமாளி’, ‘சிக்ஸர்’, 'தில்லுக்கு துட்டு-2', 'எதற்கும் துணிந்தவன்', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
ராமர் மதுரை மாவட்டத்தை சார்ந்தவர். மதுரை - மேலூருக்கு நடுவே உள்ள அரிட்டாபட்டியை சார்ந்தவர். இவருக்கும் திருமணம் ஆகி கிருஷ்ணவேனி என்கிற மனைவி மற்றும் 3 குழந்தைகள் (யமுனா ஸ்ரீ, ஹரிஷ், ஐஸ்வர்யா) உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முகநூலில் வெளியிட்டு, 'கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்.. மகிழ்ச்சி' என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் மேலூர் சுக்காம்பட்டியில், நடிகர் ராமர் கிராம நிர்வாக அலுவலராக அரசுப்பணி செய்வது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
Also Read | பிரசன்னா - அபர்னா - ரெஜினா நடித்த வெப் - சீரிஸ்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?