விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் இணைந்து நடித்தன் மூலம் புகழ் பெற்ற ஜோடிகளாக அறியப்பட்டவர்கள் சஞ்சீவ் கார்த்திக் - ஆல்யா மானஸா ஜோடி. அதனைத் தொடர்ந்து இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதனையடுத்து சமீபத்தில் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அய்லா செய்யத் (Ayla Syed ) என்று பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர். மேலும் குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட அது வைரலாவது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் ஆல்யா தனது மகளை கொஞ்சி மகிழும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காண்பதற்கு கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags : Alya Manasa, Sanjeev Karthick, Ayla Syed