“மகிழ்ச்சி இருந்தா நிலைமை மாறும்” .. வலிமை GLIMPSE-ல புகழ் பெயரை கவனிச்சீங்களா? .. தெறிக்கவிடும் POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பலருள், விஜய் டிவி புகழ் முக்கியமானவர்.

தொடக்க காலத்தில் பெண் வேடங்களில் அவ்வப்போது காமெடி ஷோக்களில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த புகழ், பின்னர் நேரடியாக தோன்றி, காமெடியில் கலக்க தொடங்கினார்.  ‘கலக்கப்போவது யாரு’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொடங்கி, பல்வேறு விஜய் டிவி ஷோக்களிலும் பங்கேற்று அனைவருடைய செல்லப் பிள்ளையாகவே மாறிய புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் மக்களிடையே ரீச் ஆனார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழ் தனக்கே உரிய பாடி லாங்குவேஜ், பேச்சு அட்ராசிட்டி உள்ளிட்டவற்றால் ஏகப்பட்ட ரசிகர்களை சம்பாதித்தார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு அதிக ஃபாலோயர்கள் உருவாகினர். இதனிடையே கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தில் புகழ் நடித்து இருந்ததாக வெளியான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அடுத்து புகழ் பல திரைப்படங்களில் தலை காட்டி வருவது பலருக்கும் தெரிய வந்தது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும்,‘என்ன சொல்லப் போகிறாய்’ திரைப்படத்தின் புகழ் காமெடியனாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப் படத்திலும் புகழ் நடிக்கிறார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்து வரும் புகழ், ‘வலிமை’ திரைப்படத்தில் இருப்பதாக வெளியான தகவல்கள் புகழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

‘வலிமை’ திரைப்படத்தைப் பொறுத்தவரை, தல அஜீத்தை வைத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கும் இரண்டாவது படம் இது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் தல அஜீத்தை இயக்கிய எச்.வினோத் அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, அந்த படத்தை தயாரித்த போனி கபூரின் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தை இயக்கத் தொடங்கினார்.

இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் நீண்ட நாட்களாக ரசிகர்களுக்கு கிடைக்காமல் இருந்த நிலையில், அண்மைக் காலமாகவே வலிமை அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு கிடைத்து, விருந்தாக அமைந்து வருகின்றன. அதன்படி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து, ‘நாங்க வேற மாரி’ என்கிற சிங்கிள் பாடல் என அனைத்துமே வலிமை திரைப்படம் தொடர்பாக வெளியாகின.

இந்த நிலையில்தான் தற்போது வலிமை திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ என்று சொல்லக்கூடிய Glimpse வெளியாகி இருக்கிறது. இதில் தல அஜீத் பைக்கில் ரேஸிங் செய்து பில்டிங் விட்டு பில்டிங் தாவுவது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

‘காத்திருந்தது வொர்த்’ என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு அபரிமிதமான மாஸ் காட்சிகள் நிரம்பிய இந்த முன்னோட்ட வீடியோ வைரலாகி வருகிறது. படத்தை காண்பதற்கு ரசிகர்களால் காத்திருக்க முடியவில்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த முன்னோட்ட வீடியோ மிகப்பெரிய எதிர்பார்ப்பை வலிமை திரைப்படம் தொடர்பாக உருவாக்கி இருக்கிறது.

இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ தொடர்பான கிரெடிட் குறிப்புகளில்தான் நடிகர் புகழின் பெயர் இடம் பெற்றிருப்பதை காண முடியும். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழ், “நிலைமை மாறினால் மகிழ்ச்சி வரும் என்பது பொய்...மகிழ்ச்சியாக இருந்தாலே நிலைமை மாறும் என்பதே மெய்...!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை பார்த்த பலரும் அதை, “வலிமை Glimpse-ல் இதை எப்படி மிஸ் பண்ணினோம்” என்று கூறி வருவதுடன், புகழுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் 2022ஆம் ஆண்டு பொங்கலில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: "குழந்தைக்காக விடுறேன்!".. "இல்லனா என்ன பண்ணுவ?" - நெட்டிசன்களுக்கு பாலாஜி மனைவி நித்யா பதிலடி!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh in valimai glimpse credits viral post

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Cook With Comali2, CookWithComali, H Vinoth, Pugazh, Trending, VijayTelevision, Vijaytv, Yuvan Shankar Raja will find this news story useful.