கைதி படத்தில் அப்பவே நடிச்சிருக்கும் விஜய் டிவி புகழ்... அந்த சீன்ல அவரை ஞாபகம் இருக்கா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் புகழுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றனர். தற்போது சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் மற்றும் குக் வித் கோமாளி ஷுட்டிங் என்று புகழ் படு பிஸியாக வளம் வருகிறார். ஆனால் புகழ் அத்தனை சுலபமாக இந்த இடத்தை அடைந்து விடவில்லை ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டதாகவும், பின்பு விஜய்டிவி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கடின உழைப்பினால் முன்னேறியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கைதி  படத்திலும் கிளைமாக்ஸில்ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார். இது பலருக்கும் தெரியாது கைதி படத்தில் அவர் நடித்த காட்சி இதுதான்.

Tags : Pugazh

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh in lokesh kanagaraj film கைதி படத்தில் விஜய் டிவி புகழ்

People looking for online information on Pugazh will find this news story useful.