"நீ ஆசப்பட்டத நான் நிறைவேத்துவேன் மாமா".. வடிவேல் பாலாஜி பற்றி புகழ் உருக்கம்.. காரணம் இதுதான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி கலக்கப் போவது யாரு, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

அவரது தனிப்பட்ட பண்புகளைப் பற்றி பேசும் அவரது நண்பர்கள் சக கலைஞர்கள் அனைவருமே வடிவேல் பாலாஜி இயல்பானவர், அனைவருக்கும் உதவக்கூடிய மனப்பான்மை உடையவர் என்றும் கூறுவர். ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தற்போது வடிவேல் பாலாஜியின் பிறந்த நாளான இன்றைய தினத்தில் அவரை நினைவூட்டி அவருடன் நடிக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் புகழ்.

விஜய் டிவி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் புகழ், தமது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி பதிவிடும்போது, “ஹேப்பி பர்த்டே மாமா.. எப்பவும் நீ என்கூடதான் இருப்ப... மக்களை.. என்னைக்கும் சந்தோசமா வெக்கணும்னு நீ ஆசப்பட்டத நான் நிறைவேத்துவேன் மாமா.. மிஸ் யூ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ALSO READ: "முதலமைச்சர் பொது நிவாரணம்.. பெப்சி அமைப்பு" என அடுத்தடுத்து நிதி வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv pugazh emotional post vadivel balaji birthday

People looking for online information on Pugazh, Vadivel Balaji will find this news story useful.