VIJAY TV PUGAZH: "நீங்களே மகனா பிறக்கணும்..".. வடிவேல் பாலாஜி குறித்து புகழ் உருக்கம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி சிரிப்புடா நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பெர்ஃபார்மென்ஸ் பண்ணிய புகழ், பின்னர் ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானவர்.

Vijay TV Pugazh Bensi emotional about vadivel balaji after marriage
Advertising
>
Advertising

Also Read | Soppana sundari: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'சொப்பன சுந்தரி'.. வெளியானது வேறலெவல் டைட்டில் லுக்.!

பின்னர் திரைப்படங்களிலும் எண்ட்ரி கொடுத்த புகழ், குக்கு வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து, ‘என்ன சொல்ல போகிறாய்’, சந்தானம் நடித்த ‘சபாபதி’, அஜீத் நடித்த ‘வலிமை’, சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய திரைப்படங்களில் புகழ் நடித்தார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் புகழ், ‘ஜூ கீப்பர்’ என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

Vijay TV Pugazh Bensi emotional about vadivel balaji after marriage

புகழின் போராட்ட காலங்களில் இவருக்குப் பக்க பலமாக இருந்தவர்களுள் ஒருவர்தான் 'அது இது எது', 'சிரிப்புடா', 'கலக்கப்போவது யாரு'  ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நகைச்சுவை பெர்ஃபார்மர் வடிவேல் பாலாஜி. அதன் பிறகு வடிவேல் பாலாஜியின் எதிர்பாராத மரணம் விஜய் டிவி கலைஞர்களின் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் ஆறா சோகத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக வடிவேல் பாலாஜி குறித்து நடிகர் புகழ் அவ்வப்போது எமோஷனல் ஆகியிருக்கிறார்.

இதனிடையே முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், பேசியிருந்த புகழ், இந்த வருடமே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் , விரைவில் கல்யாணத்தைப் பற்றி தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார். இந்நிலையில்தான் 5 வருடங்களாக, தான் காதலித்து வந்த பென்சி எனும் பென்ஸியாவை, புகழ் அண்மையில் இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்று வடிவேல் பாலாஜியின் திருமண நாள் குறித்து பதிவு ஒன்றை புகழ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்  “திருமண நாள் வாழ்த்துகள் மாமா... உங்கள் திருமண நாள் அன்று என் வாழ்க்கை பயணத்தின் அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன். உங்க ஆசீர்வாதம் எப்பவும் எங்க 2 பேருக்கும் வேண்டும். எப்பவும் என் கூடத்தான் இருப்பீங்கன்னு நம்புறேன். கண்டிப்பா நீங்களேதான் எனக்கு மகனாக பிறக்க வேண்டும்னு கடவுளை வேண்டிக்கிறேன் மாமா!’ என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

 

Also Read | Megham Karukatha: திருச்சிற்றம்பலம் மேகம் கருக்காதோ பாட்டுக்கு டான்ஸ்.. வைரலான ஜப்பான் ஜோடி.!

தொடர்புடைய செய்திகள்

Vijay TV Pugazh Bensi emotional about vadivel balaji after marriage

People looking for online information on Pugazh Bensi, Pugazh Bensi Wedding, Vadivel balaji Pugazh Bensi marriage will find this news story useful.