பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை - தனம் இடையே பிரச்சனையா ? - அப்படி என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் முல்லை, கதிர், தனம் என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாலேயே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் முல்லையாக நடித்து வரும் முல்லையாக நடித்து வரும் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் செய்தி சேனல்களில் பிரேக்கிங் நியூஸ் சொல்வது போல ஜாலியாக உருவாக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் பேசும் சித்ரா, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தான் போட்ட கோலத்தை, தனம் போட்டதாக சொன்னதாகவும், தன்னுடைய நெக்லசை தனம் திருடிக்கொண்டதாகவும் முல்லை குறிப்பிட்டுள்ளார். மேலும் தனம் இதற்கு என்ன சொல்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து வேற லெவல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Pandian Stores VJ Chitra shares a fun video, goes viral | பிரேக்கிங் நியூஸ் ஸ்டைலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பகிர்ந்த வீடிய�

People looking for online information on Pandian stores, Sujitha, Vijay tv, VJ Chitra will find this news story useful.