விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. குறிப்பாக அந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்களான கதிர் மற்றும் முல்லைக்கு சமூக வலைதளங்களில் தனிப்பட்ட ரசிகர் கூட்டமே உண்டு.

இந்நிலையில் கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''கதிர் - முல்லை ரசிகர்களுக்கு, மக்களை எங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக கவலை தெரிவித்திருந்தீர்கள். அதனைப் பற்றி கவலைப்படாதிர்கள். எப்பொழுதும் போல கதிர் - முல்லையிடம் இருந்து சிறந்தவற்றை காண்பீர்கள்.
நான் காதல், சண்டை என எந்த காட்சி வந்தாலும் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் இனி செய்யவிருக்கும் காரியங்களையும் சிறபபாக செய்வேன் என உறுதி கூறுகிறேன். கதிரை பாண்டியன் ஸ்டோரில் மட்டும் தான் பார்க்க முடியும். ஸ்டார் ஜோடி ஷோவில் எங்களை அழைத்திருந்தார்கள்.
ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஸ்டார் ஜோடியில் எங்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் அடுத்து முறை என்ற ஒன்று உண்டு. அதனால் எந்த சிக்கலிலும் தலையிடாமல் கடந்து செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.