"இனி தமிழில்!".. ‘பத்தே செகண்ட்’ வீடியோ தான்.. TREND ஆகும் விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“எதிலும் புதுமையே... தமிழனின் பெருமை” என்கிற வரிகள் ஒலிக்க, விஜய் டிவி லோகோ வீடியோ எப்போதும் அனைவரிடயே ஒரு உற்சாகத்தை கொடுப்பதாய் அமையும்.

Advertising
>
Advertising

Vijay Television

எப்போதும் டிரெண்டிங்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை சாட்டிலைட் பார்வையாளர்களுக்கும், ஓடிடி வழியே (ஹாட் ஸ்டாரில்) காண விரும்பும் பார்வையாளர்களுக்கும் தயாரித்து வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் முக்கிய சேனல் விஜய் டிவி. சீரியல்கள், பாடல், நடனம், காமெடி, குழந்தைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் விவாத நிகழ்ச்சி என தமிழ் ரசிகர்களிடைடே நீங்கா இடம் பிடித்திருக்கும் சேனல்களுள் விஜய் டிவியும் ஒன்று.

விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோ

இந்நிலையிதான் விஜய் டிவி ஒரு புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இனி தமிழில் என தலைப்பிட்டு ஒரு நிமிட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த வீடியோவில் இனி தமிழில் என எழுதப்படிருக்கிறதே தவிர, வீடியோவில் ஒன்றும் வரவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்த விஜய் டிவி, நாளை காலை 10 மணி வரைக்கும் காத்திருப்போம் என குறிப்பிட்டுள்ளது.

பிக்பாஸ் ஓடிடியா?

ஆனால், அந்த வீடியோவின் பின்னணியில், ஒலிக்கக் கூடிய சில ஒலிகளை வைத்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பேசி வருகின்றன. அதன்படி, ‘இனி தமிழி’ என்று விஜய் டிவி குறிப்பிடுகிறதென்றால் என்னவாக இருக்கும்? ஒருவேளை பிக்பாஸ் ஓடிடி-யை தமிழில் விஜய் டிவி வெளியிடப் போகிறதா? என சிலர் பேசிவருகின்றனர்.

சிலர், தமிழில் உலகப் படங்களையும் மாற்றுமொழிப் படங்களையும் விஜய் டிவி வழங்கவுள்ளதோ? என பேசி வருகின்றனர்.

கனா காணும் காலங்களா?

இன்னொரு சாரர்,  பின்னணியில் ஒலிக்கும் இசை கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியில் வரும் பின்னணி இசை என்பதால் கனா காணும் காலங்கள் ரீயூனியனாக இருக்குமோ என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆனால் சில ரசிகர்கள் இந்த ப்ரோமோவை பார்த்துவிட்டு இது குக் வித் கோமாளிக்கான அறிவிப்பாக தான் இருக்கும் என கன்ஃபார்மே செய்து கமெண்டுகளில் பேசி வருகின்றனர்.

“இனி தமிழில்”

விஜய் டிவியை பொருத்தவரை பிக்பாஸ்க்கு நிகராக பெருவாரியான ரசிகர்களைக் கொண்ட இன்னொரு முக்கியமான ரியாலிட்டி ஃபன் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஷோ குக் வித் கோமாளி. முன்னதாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பாத் நடுவர்களாக பொறுப்பு வகிக்க இதுவரை 2 சீசன்கள் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளன.

இதனால், “இனி தமிழில்” என்று அறிவித்து விஜய் டிவி வெளியிட்டிருக்கும் இந்த புதிய ப்ரோமோ, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் குறித்த அறிவிப்பாக இருக்கலாம், ஆனால் அப்படியானாலும், அந்த நிகழ்ச்சி ஏற்கனவே தமிழில்தானே நடத்தப்பட்டது என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில், இந்த அறிவிப்பின் விபரம் அறிவதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனுக்கான அறிவிப்பு தனியே வெளியாகியுள்ளது. 

Also Read: ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட தாமரை & பிரியங்கா!! BiggBoss வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay tv new promo created hype to viewers இனி தமிழில் விஜய் டிவி

People looking for online information on இனி தமிழில், Biggboss, BiggBossOTT, Biggbosstamil, BiggBossTamil5, Cook With Comali 2, Cook with comali 3, Cook With Comali 3 Promo, Cook With Comali Season 3, CWC 3 promo, Inithamizhil, Trending, Vijay tv biggboss, Vijay tv CWC3, Vijay tv new promo, Vijay tv serial will find this news story useful.