விஜய் டிவி மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் நாஞ்சில் விஜயன்.
சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர் விஜயன். பெண் வேடங்களில் இவர் தோன்றி நடித்த பல நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவை என்றே சொல்லவேண்டும். இந்நிலையில், நாஞ்சில் விஜயன் பிரபல சின்னத்திரை தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்து கோபமாக நாஞ்சில் விஜயன் வெளியேறி உள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான ப்ரோமோவில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி செட்டில் சக கலைஞர்களிடம் சண்டையிடும் நாஞ்சில் விஜயன், தான் அமரும்போது இரண்டு மூன்று முறை நாற்காலியை தள்ளிவிட்டு தன்னை வேண்டும் என்றே சீண்டுவதாக குறிப்பிட்டு நாஞ்சில் விஜயன் வெளியேறக்கூடிய பரபரப்பான காட்சிகளை காண முடிகிறது.
பொதுவாகவே விஜய் டிவி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நாஞ்சில் விஜயனை மற்றவர்கள் கலாய்ப்பதும் அதை அவர் ஸ்போட்டிவாக எடுத்துக் கொள்வதும் இயல்பாக நடந்துவரும் ஒன்றுதான். ஆனால் இம்முறை தனது சக நடிகர்களுடன் இணைந்து நாஞ்சில் விஜயன் பெர்பார்ஃமன்ஸ் பண்ணிக் கொண்டு இருக்கும் பொழுது, அவரது சக நடிகர் ஒருவர் நாஞ்சில் விஜயன் அமரக்கூடிய நாற்காலியை தள்ளிவிட, புடவை கட்டி லேடி கட்டில் இருந்த நாஞ்சில் விஜயன் கீழே விழுந்து விடுகிறார். தான் சரிந்து கீழே விழுந்ததும் தட்டுத் தடுமாறி எழுந்த நாஞ்சில் விஜயன், “சும்மா சும்மா தள்ளி விடுகிறார்கள்.. என்ன விளையாடுகிறீர்களா? நான் முன்பே சொன்னேன்” என்று கோபமாக செட்டை விட்டு வெளியேறி இயக்குனரிடம் முறையிடுகிறார்.
மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். பலர், “விஜயன் போகாதே” என்று சொல்கின்றனர். அதையும் மீறி நாஞ்சில் விஜயன் வெளியேறுகிறார். தாடி பாலாஜி, ஸ்ருதிஹா மற்றும் மதுரை முத்து இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக வீற்றிருக்கின்றனர். அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா தொகுப்பாளர்களாக இருக்கிறார். எனினும் இது இயல்பான ஒன்றா அல்லது பிராங்கா என்று எபிசோடில் தான் தெரிய வரும்.