விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கவின் எவிக்ஷனுக்கு முன்பாகவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் இயக்குநர் சேரன் வெளியேறிய நிலையில், பிக் பாஸ் அறிவித்த ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை ஏற்று கவின் பிக் பாஸ் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். கவினின் இந்த அதிரடி முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் உள்ள சாண்டி மற்றும் லாஸ்லியாவுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இது குறித்து பிக் பாஸ் பிரபலமான வனிதா ட்விட்டரில் கவினை பாராட்டி ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.
அந்த ட்வீட்டில், ‘கவினின் முடிவுக்கு ஒரு சல்யூட். இதை தியாகம் இல்ல எதுவேணாலும் சொல்லிக்கலாம். இதை செய்ய அவனிடம் துணிச்சல் இருந்திருக்கு. சரியான தருணத்திற்காக காத்திருந்து, எந்த விதிமுறையையும் மீறாமல், புதிதாக டிராமா கிரியேட் பண்ணாமல் எதற்காக வந்தானோ, எதை செய்ய வேண்டுமோ அதை செய்திருக்கிறான்’ என கூறியுள்ளார்.