WOW ! BIGG BOSS 4 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்டில் இவங்களாம் இருக்காங்களா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இந்த வருடம் அக்டோபர் 4 தேதி துவங்கப்படவிருக்கிறதாம். இதனையடுத்து கமல்ஹாசன் ஸ்டைலிஷாக தோன்றி அறிவிக்க வெளியான புரொமோ ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

புரொமோ வெளியான நாளிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஃபைனல் லிஸ்டில் இருப்பவர்கள் குறித்த தகவல்களை Behindwoods சார்பாக பகிர்ந்திருந்தோம்.

இந்நிலையில் ஃபைனல் லிஸ்டில் இருப்பவர்களில் மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதில் இயக்குநரும் நடிகருமான அனுமோகன், ரெட்டை ரோஜா சீரியலில் நடித்துள்ள ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் ஃபைனல் லிஸ்டில் இருக்கிறார்களாம். அதில் யாரெல்லாம் செல்வார்கள் என்பது குறித்து விஜய் டிவியின் முடிவுக்கு பிறகே தெரியும். மேலும் டிக்டாக் இலக்கியாவுடனும் தற்போது பேச்சுவார்த்தை  நடைபெற்று வருகிறதாம்.

'பிகில்' படத்தில் தென்றலாக கலக்கிய அம்ரிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு ''தெரியல, சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்'' என்றார். மறைமுகமாக நிகழ்ச்சியில் ஆமோதிப்பது போலவே அவரது பதில் இருந்தது. மேலும் போட்டியாளர்கள் அனைவரும் 17 நாட்கள் ஒரு ஹோட்டலில் குவாரண்டினில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

WOW ! BIGG BOSS 4 போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்டில் இவங்களாம் இருக்காங்களா ? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 Contestants details | பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரம்

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Shivani Narayanan will find this news story useful.