BIGG BOSS 4: இந்த தடவ விஜய் டிவியில் இருந்து இத்தனை பேர் போறாங்களா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கவிருப்பதாக விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டிருந்த புரோமோ மூலம் அறிவித்திருந்தது. இதனையடுத்து இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது.

அந்த வகையில் இந்த வருட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் குறித்து எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தது. மேலும் பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் தற்போது குவாரன்டின் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருக்கிறாராம். அடுத்ததாக நடிகை ஷிவானி, விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்த கேப்ரியலா, நடிகரும் இயக்குநருமான அனு மோகன், நடிகை கிரண், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய ரம்யா பாண்டியன், நடிகை சனம் ஷெட்டி, பாடகர் வேல்முருகன், சஞ்சனா சிங், நடிகை அபிநய ஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கின்றனராம்.

அதே போல சீசன் 1ல் ஆரவ், சீசன் 3ல் தர்ஷன் மாதிரி இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் என்கிற மாடல் உள்ள போகப்போகிறாராம். இவர்களில் பெரும்பாலோனார் விஜய் டிவியுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BIGG BOSS 4: இந்த தடவ விஜய் டிவியில் இருந்து இத்தனை பேர் போறாங்களா ? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV, Kamal Haasan's Bigg Boss 4 contestant details | விஜய் டிவி கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்பவர்கள் விவரம்

People looking for online information on Bigg boss, Kamal Haasan, Vijay tv will find this news story useful.