"சித்ரா உடம்புல அங்கே காயங்கள்"... நியாயம் கிடைக்க வேண்டும்...குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான யுவராஜ் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும் பொழுது சித்ராவை பற்றி பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார். அவர் கூறும்போது "என்னால இதை ஆரம்பம் முதலே தற்கொலை என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. RDO விசாரணையின் பின்பு கூட இது  தற்கொலை என்று ஒப்புக்கொள்ள முடியவில்லை. காரணம் எனக்கு தெரிந்த சித்ரா அப்படிபட்ட பெண் அல்ல. அவரது கழுத்து, இடுப்புப் பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளன. ஹேமந்த் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாது. காரணம் சித்ரா எல்லாவற்றையும் எங்களிடம் இருந்து மறைத்துவிட்டார். சித்ரா மூலமாக ஹேமந்த்  அறிமுகமான யாருக்குமே ஹேமந்த் பற்றி தெரியாது. சித்ராவுக்கு நிச்சயம் நியாயம் கிடைத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார்.

"சித்ரா உடம்புல அங்கே காயங்கள்"... நியாயம் கிடைக்க வேண்டும்...குரல் கொடுத்த விஜய் டிவி பிரபலம்..! வீடியோ

Tags : Chithra

தொடர்புடைய செய்திகள்

Vijay tv fame yuvaraj interview about chithra

People looking for online information on Chithra will find this news story useful.