கோலாகலமாக நடந்த CWC புகழ் திருமணம்.! வைரலாகும் புகைப்படங்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மக்களின் ஏகோபித்த அபிமானத்தை பெற்ற புகழுக்கு ரசிகர்கள் பட்டாள ஏராளம். மிகவும் கஷ்டப்பட்ட புகழ் ஆரம்பத்தில் கார் ஷோ ரூமில் காரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.

Vijay TV Cook With Comali Pugazh Wedding viral pic
Advertising
>
Advertising

Also Read | விஜய் - ராஷ்மிகா நடிக்கும் 'வாரிசு'.. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போ? மெர்சலான அப்டேட்

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் டிவியின் வித்தியாசமான நகைச்சுவை கலந்த சமையல் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார்.

Vijay TV Cook With Comali Pugazh Wedding viral pic

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் முக்கியமான இடத்தை பிடித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழ் தனக்கே உரிய கலகலப்பான காமெடியான தன்மையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாயினர். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து, ‘என்ன சொல்ல போகிறாய்’, சந்தானம் நடித்த ‘சபாபதி’, அஜீத் நடித்த ‘வலிமை’, சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய திரைப்படங்களிலும் புகழ் நடித்துள்ளார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார்.  இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்தும் வந்தார். முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசியிருந்த புகழ், இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் , விரைவில் கல்யாணத்தைப் பற்றி சொல்வதாகவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில்தான் புகழ் மற்றும் பென்ஸியின் திருமணம் கோலகலமாக நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து,  புகழுக்கு அவருடைய ரசிகர்களும், ஏனைய பிரபலங்களும் தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #வாழ்த்துக்கள்_புகழ்.!

Also Read | 'விடுதலை' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர் & தயாரிப்பாளர்.. போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Cook With Comali Pugazh Wedding viral pic

People looking for online information on Cook with comali pugazh, Vijay TV pugazh wedding, Vijay TV Puhazh will find this news story useful.