விஜய் டிவி 'சின்ன தம்பி' புகழ் பிரபல நடிகைக்கு காதலருடன் நடைபெற்ற நிச்சயதார்த்தம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' கல்லூரியின் கதை மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வேதா சுப்ரமணியம். தொடர்ந்து 'கார்த்திகை பெண்கள்', 'அழகி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார்.

தற்போது விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன தம்பி' சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அவரது காதலர் அருண் என்பவருக்கும் கடந்த ஜூலை 9 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மேலும் நாளை(05/09/2020) அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவரது நிச்சயதார்த்தத்தில் ஏராளமான டிவி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவி 'சின்ன தம்பி' புகழ் பிரபல நடிகைக்கு காதலருடன் நடைபெற்ற நிச்சயதார்த்தம் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV Chinna Thambi fame popular actress got engaged, Pics viral | விஜய் டிவி சின்ன தம்பி புகழ் பிரபல நடிகைக்கு நடைபெற்ற நிச்சயதார்த்த

People looking for online information on Chinna Thambi, Swetha Subramaniam, Vijay tv will find this news story useful.